ETV Bharat / bharat

100 ரூபாய் கடனை திருப்பித் தராததால் ஆத்திரம்.. நண்பரை வெட்டிக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை! - மேற்கு வங்காளம்

100 ரூபாய் கடனை திருப்பித் தர மறுத்த நண்பனை வெட்டிக் கொலை செய்த நபருக்கு, ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

100 ரூபாய்க்காக நண்பரை வெட்டிக் கொலை- ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு!

author img

By

Published : May 20, 2023, 2:20 PM IST

ஜல்பைகுரி: மேற்கு வங்காளம், ஜல்பைகுரி மாவட்டத்தை சேர்ந்தவர் கோபின் ஓரான். இவர் மற்றும் இவரது நண்பர் நூர் இஸ்லாம் இருவரும் டீஸ்டா நதிக்கரையில் உள்ள பிரேம் கஞ்ச் என்ற பகுதியில், மோஹிஷின் பதானில் காவலாளிகளாக பணியாற்றி வந்துள்ளனர். இருவரும் நண்பர்கள் என்பதால், நூர் இஸ்லாம் பணம் தேவையின் காரணமாக கோபின் ஓரானிடம் 100 ரூபாயை கடனாக கேட்டுள்ளார்.

அதை கொடுத்த கோபின் ஓரான், கடனை திருப்பி கேட்டுள்ளார். ஆனால், நூர் இஸ்லாம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமல் அவரை அலைகளித்து உள்ளார். எப்போது கோபின் பணத்தை கேட்டாலும், 500 ரூபாய் நோட்டை கையில் எடுத்துக்காட்டி அவரை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

2016 ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படும் நிலையில், பண மதிப்பிழப்பு காரணமாக கோபினுக்கு மிகுந்த பணத் தேவை ஏற்பட்டுள்ளது. ஆனால், நூர் இஸ்லாம் தொடர்ந்து பணத்தை தர மறுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2016 ஆம், ஆண்டு நவம்பர் மாதம் பணிக்கு சென்று உள்ளார்.

இரவு பணிக்காக சென்ற நூர் இஸ்லாம், மறுநாள் காலை நவம்பர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்ட நிலையில், உள்ளூர் வாசிகள் மோஹிஷின் பதான் பகுதியில் நூர் இறந்து கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் போலீசார் சென்று பார்த்த போது, நூர் இஸ்லாம் உடல் முழுதும் பலத்த காயத்துடன் இரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்து கிடந்துள்ளார். மேலும், அவர் கூர்மையான ஆயுதம் ஒன்றால் தாக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையின் போது சந்தேகத்தின் அடிப்படையில் கோபின் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து, நூர் இஸ்லாம் மற்றும் கோபின் பணம் தொடர்பான அனைத்தையும் அறிந்த போலீசார், அது குறித்து அவரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். இதில் பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட காலத்தில் அதிக பண நெருக்கடியில் இருந்த காரணத்தினாலும், வாங்கிய கடனை திருப்பி தராமல் நூர் ஏமாற்றியதாலுல் ஆத்திரத்தில் கோடரியால் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கை, ஜல்பைகுரி கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்நிலையில், வழக்கின் இறுதி கட்ட விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி ரிந்து சுர், கோபினுவக்கு ஆயுள் தண்டனை விதித்தனர். மேலுன், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தனர். இந்த வழக்கு தொடர்பாக உயிரிழந்த நூர் இஸ்லாம் குடும்பத்தினர் 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

100 ரூபாய் கடனை திருப்பிச் செலுத்தாத காரணத்திற்காக நண்பர் என்றும் கூட பாராமல் வெட்டி கொலை படுகொலைச் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்பு.. விழாக் கோலம் பூண்ட கர்நாடகா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.