ETV Bharat / bharat

சுமார் 35,000 பாம்புகளை பிடித்தவர் பாம்பு கடித்து மரணம்

கர்நாடகாவில் 35,000க்கும் மேற்பட்ட பாம்புகளை காப்பாற்றி காட்டிற்குள் விட்டு வந்த பாம்பு லோகேஷ் பாம்பு கடித்ததில் உயிரிழந்தார்.

35,000க்கும் மேற்பட்ட பாம்புகளை காப்பாற்றிய பாம்பு லோகேஷ் மரணமடைந்தார்..

author img

By

Published : Aug 24, 2022, 9:10 AM IST

நெலமங்களா (கர்நாடகா): கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகரத்திற்கு அருகில் உள்ள நெலமங்களா பகுதியில் உள்ள மாருதி நகரில் வசித்து வந்தவர், லோகேஷ். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் இப்பகுதியில் ஒரு சிறிய ஹோட்டல் நடத்தி வந்தார்.

அதேநேரம் கலைத்துறையில் ஆர்வம் கொண்ட லோகேஷ், ஆர்கெஸ்ட்ராவில் பாடகராகவும் பணியாற்றி வந்தார். மேலும் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். இதனிடையே சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளை நேசித்த லோகேஷ், பாம்புகளை பாதுகாப்பதில் பணியாற்றத் தொடங்கினார்.

இதனால் நெலமங்களத்தைச் சுற்றி யார் எவ்வளவு தூரம் கூப்பிட்டாலும், பாம்புகளை பிடித்து காட்டினுள் விடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதற்காக இவர் பணத்தை எதிர்பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உத்தேசமாக இதுவரை 35,000 பாம்புகள் பிடிக்கப்பட்டு, இவரால் காட்டில் விடப்பட்டுள்ளன.

பாம்பு லோகேஷ்
பாம்பு லோகேஷ்

இவ்வாறு நெலமங்களாவைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரக்கணக்கான பாம்புகளை காப்பாற்றிய லோகேஷ், ‘பாம்பு லோகேஷ்’ என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி நெலமங்களா தாலுகாவில் உள்ள டபஸ் நகரில் பாம்பை பிடிப்பதற்காக லோகேஷ் சென்றுள்ளார்.

அப்போது அவரது வலது கை விரலை விஷம் கொண்ட நாகப்பாம்பு கடித்துள்ளது. இதனையடுத்து உடனடியாக லோகேஷ் நெலமங்களா தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மேல்சிகிச்சைக்காக சிகிச்சைக்காக பெங்களூரு மணிபால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் இங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையும் படிங்க: தாயை விட பெரிய சக்தி எதுவும் இல்ல... சீறிய பாம்பிடம் இருந்து சிறுவனை காத்த தாய்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.