பெங்களூரு: கர்நாடக மாநிலம் கடக் மாவட்டம் உள்ள பலேஹோசூரில் புதிய பேருந்து நிறுத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் 15 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த கோரிக்கைகளுக்கு எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள், கவனம் ஈர்க்கும் வகையில், தென்னை ஓலைகளை வைத்து தற்காலிக பேருந்து நிறுத்தத்தை அமைத்தனர். இந்த நிறுத்தத்தை எருமையை வைத்து, ரிப்பன் வெட்டி திறந்தனர்.
இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பலேஹோசூர் பேருந்து நிறுத்தத்தின் நிழற்குடை 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அடுத்த 5 ஆண்டுகளில் இடிந்து விழுந்துவிட்டது. அப்போதிலிருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் பேருந்துக்காக மழை, வெயிலில் சாலையில் நின்றுவருகிறோம்.
எத்தனை கோரிக்கைகள் வைத்தாலும் அலுவலர்கள் நடவடிக்கைகள் எடுப்பதில்லை. குறிப்பாக அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் பதில் கூட அளிப்பதில்லை. ஆகையால், இந்த நூதன போராட்டம் மூலம் கோரிக்கையையும், கண்டனத்தையும் தெரிவிக்கிறோம்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் டோல்கேட்டில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி