மகாராஷ்ட்ரா: மகாராஷ்ட்ரா மாநிலம் சிந்துர்க் மாவட்டத்தில் உள்ள மால்வான் தர்கார்லி கடற்பகுதியில், 20 சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச் சென்ற படகு எதிர்பாராத விதமாக கடலில் கவிழ்ந்தது. இதில் படகிலிருந்த அனைவரும் கடலில் விழுந்தனர். இதைக் கண்ட உள்ளூர்வாசிகள் சுற்றுலாப்பயணிகளை மீட்க முயற்சித்தனர். இருப்பினும் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
18 சுற்றுலாப்பயணிகள் மீட்கப்பட்டு மால்வான் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஸ்கூபா டைவிங்கிற்கான சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மோசமான வானிலை இருந்ததால், அதீத காற்று வீசியதில் படகு கவிழ்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கடலோரப்பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் தற்போது ஸ்கூபா டைவிங்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தடையை மீறி சுற்றுலாப்பயணிகளை கடலுக்குள் அழைத்துச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மத்திய பிரதேச சரணாலயத்தில் பிறந்த 72 முதலை குட்டிகள்!!