பஞ்சாப்(ஜலந்தார்): தனது விழித்திரையில் ஏற்பட்ட பாதிப்பால் பார்வையை இழந்த ஒருவர் தனது கண்களில் வேலை செய்யும் பகுதியைத் தானமாகக் கொடுக்க முன்வந்துள்ளார். ஜலந்தார் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிஷ் குமார் எனும் இவருக்கு திடீரென பார்வை பறிபோனது. இதையடுத்து, மோகா, ஜலந்தார், சண்டிகர், டெல்லி, ஹைதராபாத் போன்ற பகுதிகளிலுள்ள பல மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக ஏறி இறங்கியுள்ளார்.
ரஷ்யாவிலிருந்து கூட ஓர் ஊசியை வரவழைத்துச் சிகிச்சைபெற்றுப் பார்த்தார். ஆனால் அத்தனை சிகிச்சையும் பலன் தரவில்லை. இதனால் தற்போது தனது கண்களில் பாதிப்படையாட பகுதிகளான கருவிழி மற்றும் சில பகுதிகளை தானம் செய்ய முடிவெடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “நான் பார்வையற்று இருந்தால் என்ன..?, என்னால் மற்றொருவர் இவ்வுலகைக் காண என்னால் உதவ முடிகிறதே..! நான் பல ஆண்டுகளாகப் பார்வையற்று இருந்து விட்டேன். அது எப்படி இருக்குமென்பது எனக்குத் தெரியும். ஆகையால், என்னால் ஒருவர் இந்த உலகத்தைக் கண்டால் எனக்கு அதை விட மகிழ்ச்சி வேறெதுவும் இருந்து விடாது” எனக் கூறுகிறார்.
திடீரென பார்வை பறிபோன ஹரிஷ் குமார் அதை சரி செய்ய பல முறை முயற்சி செய்துள்ளார். இதற்காகப் பஞ்சாபில் தனது தொழிலையே மூடிவிட்டு ஜலந்தார் வந்தடைந்தார். இருப்பினும் அவரால் அதைச் சரி செய்ய முடியவில்லை. வானொலியில் ஓர் நிரந்தர வேலையில் இருப்பது ஹரிஷ்குமாரை தொடர்ந்து தன்னம்பிக்கையான வாழ்வாதாரத்தை உறுதி செய்கிறது.
ஹரிஷ் குமாரின் இந்த முடிவை அறிந்த அவரது குடும்பத்தார், அவரின் மகள் ஆகியோர் அவரின் பெருந்தன்மையைக் கண்டு நெகிழ்ந்து அவரைப் பாராட்டினர்.
இதையும் படிங்க: கத்தாருக்கு காரில் செல்லும் கேரள பெண் யூடியூபர்... காரணம் என்ன...?