டெல்லியின் துணை முதலமைச்சரும், அம்மாநில கல்வி அமைச்சருமான மனிஷ் சிசோடியா, நேற்று (ஜூலை.04) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டெல்லி அரசாங்கத்தின் கீழ் இயங்கும் பள்ளிகள் 98 விழுக்காடு மாணவர் - ஆசிரியர் விகிதத்தைக் கொண்டுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.
இது குறித்து மத்திய அரசின் அறிக்கையை மேற்கோள்காட்டிப் பேசிய அவர், "டெல்லி மாநகராட்சிப் பள்ளிகள் நல்ல நிலையில் இல்லை. அவை தரம், வசதிகள் மிகவும் குறைந்த வகை பள்ளிகளாகக் கருதப்படுகின்றன. இந்தப் பள்ளிகள் முழு டெல்லியின் உருவத்தையும் கெடுக்கின்றன” என்றார்.
தொடர்ந்து, கிழக்கு டெல்லியில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் சுமார் 58 விழுக்காடு பள்ளிகள், மாணவர் - ஆசிரியர் சேர்க்கையை பராமரிக்கத் தவறிவிட்டதையும், வடக்கு, தெற்கு மாநகராசிப் பள்ளிகளின் இந்தப் புள்ளி விவரங்கள் முறையே 46 மற்றும் 39 விழுக்காடாக உள்ளதையும் சுட்டிக்காட்டிய மனிஷ் சிசோடியா, "பாஜக அரசின் கீழ் இயங்கும் மாநகராட்சிப் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு ஆசிரியர்களை வழங்க முடியாத அளவுக்கு திறமையற்றவர்கள் என்ற உண்மையை இது நிறுவுகிறது.
இது டெல்லியின் நற்பெயரை பணயம் வைக்கும் வகையில் அமைந்துள்ளது" என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: NIPUN புதிய கல்வி திட்டத்தை தொடங்கி வைக்கும் அமைச்சர்