ETV Bharat / bharat

92 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை.. லிஃப்ட் கொடுப்பதாக அழைத்துச் சென்று கொடூரம் - மத்திய பிரதேசத்தில் மூதாட்டி பாலியல் வன்கொடுமை

மத்தியப் பிரதேசத்தில் 92 வயது மூதாட்டிக்கு லிஃப்ட் கொடுப்பதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மூதாட்டி போராடி வருகிறார்.

மூதாட்டி பாலியல் வன்கொடுமை
மூதாட்டி பாலியல் வன்கொடுமை
author img

By

Published : Jan 15, 2023, 9:31 PM IST

ஷாதோல்: மத்திய பிரதேச மாநிலம் ஷாதோல் அடுத்த ஜபல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 92வயது மூதாட்டி. மட்வா கிராமத்தில் உள்ள தன் உறவினர்களை காண திட்டமிட்டுள்ளார். ஜபல்பூரில் இருந்து ஷதோல் நகருக்கு ரயில் மூலம் வந்த மூதாட்டி, நள்ளிரவில் ரயில் நிலையத்தை அடைந்துள்ளார்.

ஆட்டோ மூலம் அந்தாரா கிராமத்தை அடைந்த மூதாட்டி, தன் உறவினர்களின் சொந்த ஊரான மட்வா கிராமத்திற்கு செல்ல பேருந்திற்காக காத்துக் கொண்டு இருந்துள்ளார். இதனிடையே அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபர், மூதாட்டியை மட்வா கிராமத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறி வாகனத்தில் ஏற்றியுள்ளார்.

ஊர் எல்லையை தாண்டி காட்டுப் பகுதிக்கு சென்றதும், வாகனத்தை நிறுத்திய மர்ம நபர், மூதாட்டியிடம் எல்லை மீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் காட்டுப்பகுதிக்குள் மூதாட்டியை இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது. சம்பவ இடத்தில் இருந்து உறவினர்கள் கிராமத்திற்குள் நுழைந்த மூதாட்டி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து உறவினர்களிடம் கூறியுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் மூதாட்டியின் உறவினர்கள் அளித்த புகாரில், அந்தாரா பகுதியைச் சேர்ந்த பகவந்தா கோல் என்பவரை அடையாளம் கண்டு கைது செய்ததாக போலீசார் கூறினர். 42 வயதான பகவந்தா கோலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

92 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி பெண்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரம் இதேபோல் முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் இருந்த முதிய பெண்ணை, நோட்டமிட்டு 20 வயது இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அந்த சம்பவம் தொடர்பாகவும் விசாரனை நடத்தி வருவதாகவும் போலீசார் கூறினர்.

இதையும் படிங்க: Nepal plane crash: 5 இந்தியர்கள் உள்பட 72 பேர் விமான விபத்தில் பலி எனத் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.