ETV Bharat / bharat

Karnataka Election 2023: 92 வயதில் களம் காணும் ஷாமனூர் சிவசங்கரப்பா!

author img

By

Published : Apr 18, 2023, 8:15 PM IST

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் 92வது வயதில் களம் காணும் ஷாமனூர் சிவசங்கரப்பாவை பற்றி காணலாம்.

Karnataka Election 2023: 92 வயதில் களம் காணும் ஷாமனூர் சிவசங்கரப்பா!
Karnataka Election 2023: 92 வயதில் களம் காணும் ஷாமனூர் சிவசங்கரப்பா!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் வருகிற மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளின் சூறாவளி பிரசாரம் அனல் பறக்க நடைபெற்று வருகிறது. இதனிடையே, கர்நாடக மாநிலத்தின் தேவநாகிரி தெற்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஷாமனூர் சிவசங்கரப்பா (Shamanur Shivshankarappa) வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். அதேநேரம், இதே தொகுதியில் பாஜக சார்பில் பிஜி அஜய்குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இதில் என்ன ஆச்சர்யம் என்றால், தேவநாகிரி தெற்கு (Davanagere South) தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஷாமனூர் சிவசங்கரப்பாவுக்கு 92 வயது ஆகிறது. இவரே, இம்மாநிலத்தின் அதிக வயதுடைய வேட்பாளர் என அறியப்படுகிறார். இதில், பாஜக வேட்பாளரான அஜய்குமார் லிங்காயத் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதுதான், தேவநாகிரி தெற்கு தொகுதியை மேலும் கவனிக்க வைத்துள்ளது. ஏனென்றால், தேவநாகிரி தொகுதியில் 83 ஆயிரம் இஸ்லாமிய வாக்குகள் உள்ளன.

அதேநேரம், சிவசங்கரப்பா வீரஷைவ லிங்காயத் மகாசபாவின் தேசியத் தலைவர் ஆவார். இதில், சிவசங்கரப்பா 3 முறை தொடர்ந்து தேவநாகிரி தெற்கு தொகுதியில் வென்றுள்ளார். அதேநேரம், 5 முறை தேவநாகிரி நகரத்தில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி உள்ளார். கடந்த 1994ஆம் ஆண்டு அரசியலில் அறிமுகம் ஆன சிவசங்கரப்பா, அதே ஆண்டில் தேவநாகிரி முனிசிபல் கவுன்சிலின் தலைவர் ஆனார்.

அதன் பிறகு, அதே ஆண்டில் தேவநாகிரி சட்டமன்றத் தொகுதியில் வென்று, முதன் முறையாக கர்நாடகா சட்டசபையான விதானா செளதாவில் நுழைந்தார். பின்னர், 2004ஆம் ஆண்டு மீண்டும் அதே தேவநாகிரி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இதனையடுத்து, 2008ஆம் ஆண்டு தொகுதி பிரிக்கப்பட்டது. இதனால் 2008, 2013 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தேவநாகிரி தெற்குத் தொகுதியில் போட்டியிட்டு, தொடர்ச்சியாக 3 முறையும் வெற்றி பெற்றார்.

அது மட்டுமல்லாமல், 1997ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிவசங்கரப்பா, 1999ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்தார். மேலும், இது குறித்து ஷாமனூர் சிவசங்கரப்பா கூறுகையில், “இந்த தொகுதி (தேவநாகிரி தெற்கு) மக்களின் ஆசிர்வாதங்கள் என் மீது உள்ளன. நான் 92 வயதான நிலையிலும், தேர்தலில் இயங்கிக் கொண்டிருக்கிறேன். நான் மக்களின் ஆதரவுடன் மீண்டும் வெற்றி பெறுவேன். இந்த தெற்கு தொகுதியில் நான் தொடர்ச்சியாக வெற்றி பெறுவேன். இந்த முறை நான் வெற்றி பெற்று, வரலாற்றைப் படைப்பேன்” எனத் தெரிவித்தார்.

அதேபோல், ஷாமனூர் சிவசங்கரப்பாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.மல்லிகார்ஜூன் கூறுகையில், “இந்த வயதிலும் எனது தந்தை தேர்தல் பிரசாரத்தை வலிமையோடு செய்கிறார். இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்று, மாநிலத்தில் சரித்திரத்தை படைக்க உள்ளார்” என்றார்.

இதையும் படிங்க: Karnataka Election: ஹிமாச்சல் பாணியில் ஆட்சியை இழக்கும் அபாயம்.. கர்நாடாக பாஜகவில் நடப்பது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.