ETV Bharat / bharat

பழங்குடியினப் பெண்ணின் ஆடைகளை கிழித்து தாக்குதல்... கர்நாடகாவில் கொடூரம்... - பழங்குடியினப் பெண்ணின் ஆடைகளை கிழித்து தாக்குதல்

கர்நாடகா மாநிலத்தில் பழங்குடியினப் பெண்ணின் ஆடைகளை கிழித்து தாக்குதல் நடத்திய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

9 people booked for stripping, assaulting tribal woman in Karnataka

author img

By

Published : Apr 25, 2022, 9:54 AM IST

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் இரு தரப்பினரிடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்துவந்துள்ளது. இதனிடையே, அந்த நிலத்தை அளக்க வருவாய்த் துறை அதிகாரிகள் சென்றுள்ளனர்.

அப்போது இரு தரப்பினரிடை மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுவிட்டனர். இதையடுத்து ஒன்பது பேர் கொண்ட ஒரு தரப்பு கும்பல், மற்றொரு தரப்பில் உள்ள 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் ஆடைகளை கிழித்து தாக்குதல் நடத்தினர்.

அதுமட்டுமல்லாமல், சம்பவத்தை வீடியோ எடுத்தாக கூறப்படுகிறது. அதோடு அந்த பெண்ணின்மூத்த சகோதரி மற்றும் தாயும் தாக்கப்பட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பெலத்தங்கடி போலீசில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில், சந்தீப் (30), சந்தோஷ் (29), குலாபி (55), சுகுணா (30), குசுமா (38), லோகய்யா (55), அனில் (35), லலிதா (40), சென்ன கேசவா (40) ஆகிய 9 பேர் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பட்டியலின புதுமணத் தம்பதிக்கு கோயிலுக்குள் அனுமதி மறுப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.