ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் காரும் - ராட்சத டிரெய்லர் வாகனமும் மோதிக் கொண்ட கோர சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜெய்ப்பூர் மாவட்டத்தின் பாகி கிராமத்தைச் சேர்ந்த குடும்பத்தினர், அஜ்மீரில் உள்ள தர்ஹாவை சுற்றிப் பார்க்க காரில் சென்று உள்ளனர். ராம்நகர் அருகே கார் சென்று கொண்டு இருந்த போது, எதிரே வந்த டிரெய்லர் வாகனத்தின் முன்பக்க டயர் வெடித்து தறிக்கெட்டு ஓடியதாக கூறப்படுகிறது.
கட்டுப்பாட்டை இழந்த டிரெய்லர் வாகனம், மறுபக்க சாலையில் இறங்கி எதிரே வந்த கார் மீது விழுந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்த கார் மீதும் டிரெய்லர் வாகனம் விழுந்த இந்த கோர விபத்தில் லாரியின் அடியில் காரில் வந்தவர்கள் அனைவரும் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த கோர விபத்தில் காரில் பயணித்தவர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்த ஈடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுபினர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லாரியின் அடியில் சிக்கிய மீதமுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
கடும் போராட்டத்திற்கு பின் காரில் இருந்தவர்களின் சடலங்களை போலீசார் கைப்பற்றினர். இந்த கோர விபத்தில் 9 பேர் பலியானதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். அதிர்ஷ்டவசமாக ஒருவர் உயிர் பிழைத்த நிலையில், உயிருக்கு ஆபத்தான மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
விபத்து ஏற்படுத்திய லார் டிரைவர் தப்பி தலைமறைவானதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். அனுஉலை கழிவுகளை ஏற்றிக் கொண்டு வந்த போது டிரெய்லர் வாகனத்தின் முன்பக்க டயர் வெடித்து இந்த கோர விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். கவனமுடன் அனுஉலை கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டதாகவும், இந்த விபத்தால் அப்பகுதியில் கடும் வாகன போக்குவரத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க : ரூ.8 ஆயிரம் திருடியதாக சந்தேகம்! கல்லூரி மாணவிகள் மீது வன்கொடுமை தாக்குதல்!