ETV Bharat / bharat

நாடாளுமன்றத்தில் 875 பேருக்கு கரோனா- பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்குமா? - vengaya nayudu 2nd time corana

வரும் ஜனவரி 31 பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்க இருக்கும் நிலையில், தற்போது நாடாளுமன்ற ஊழியர்கள் 875 பேர் கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

author img

By

Published : Jan 24, 2022, 1:38 PM IST

புதுடெல்லி: இந்தியா முழுவதும் கரோனா மூன்றாவது அலை பரவி வருகிறது. தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவருகிறது.

இந்நிலையில் தற்போது நாடாளுமன்றத்தில் 875 ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31 அன்று தொடங்கவுள்ளது. இதற்காக 2,847 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் அங்குள்ள 875 பேருக்கு கரோனா இருப்பது உறுதியாகிள்ளது.

நாடு முழுவதும் கரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் விதித்து வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் அதிகமாக தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடரானது ஜனவரி 31 முதல் ஏப்ரல் 8 வரை முதல் பாதிக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு மாத கால இடைவெளியுடன் நடைபெறும். பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

துணை குடியரசுத் தலைவருக்கு கரோனா

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இரண்டாவது முறையாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவர்களின் பரிந்துரைப்படி ஹைதராபாத்தில் உள்ள வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்.

வெங்கையா நாயுடுவிற்கு ஏற்கனவே ஒருமுறை கரோனா பாதிப்பு ஏற்பட்டுக் குணமடைந்திருந்த நிலையில், தற்போது 2ஆவது முறையாக அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  • The Vice President, Shri M. Venkaiah Naidu, who is in Hyderabad, tested COVID positive today. He has decided to remain in self-isolation for a week. He has advised all those who came in contact with him to isolate themselves and get tested.

    — Vice President of India (@VPSecretariat) January 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க:பெண்ணினம் என்பது மெல்லினம் அல்ல வல்லினம்; ஆளுநர் தமிழிசை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.