தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு உயிரிழந்தார். 2012 டிசம்பர் 16ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவம் உலகையே உலுக்கியது. இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட நிலையில், இன்றுடன் (டிச. 16) நிர்பயா சம்பவம் நடந்து எட்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன.
நிர்பயா சம்பவத்தை அடுத்து பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் மற்றும் சட்டங்கள் இயற்றப்பட்டன. இருப்பினும், இந்தியாவில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறையவில்லை. 2012ஆம் ஆண்டில், மொத்தம் 706 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன, இதில் நிர்பயாவின் வழக்கும் அடங்கும்.
இந்த ஆண்டு (2020) அக்டோபர் வரை ஆயிரத்து 429 பாலியல் வன்கொடுமை வழக்குகள் டெல்லியில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதில் 94 வரதட்சணை உயிரிழப்பு வழக்குகள் அடங்கும். அதுமட்டுமின்றி, இந்த வழக்குகள் இந்தாண்டு முடிவதற்குள் இரண்டாயிரத்து 168 வழக்குகள் வரை அதிகரித்துள்ளது.
இதேபோன்று 2019ஆம் ஆண்டில் மட்டும் இரண்டாயிரத்து 520 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிர்பயா உயிரிழந்து இன்றுடன் (டிச. 16) எட்டு ஆண்டுகள் நிறைவுபெற்றிருந்தாலும், குற்றங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
இதையும் படிங்க...உலக வரைபடத்தை மாற்றியமைத்த வீரர்களுக்கு வெற்றி தின வாழ்த்துகள் தெரிவிக்கும் தலைவர்கள்