பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூரு மாவட்டத்தைச் சேர்ந்த ராஜு(31) என்பவருக்கு பல லட்சம் ரூபாய் கடன் இருந்ததாக தெரிகிறது. கடனை சமாளிக்க முடியாமல் திணறிய ராஜு, தனது சொந்த ஊரை விட்டுவிட்டு குடும்பத்துடன் ராமநகரம் மாவட்டத்தில் உள்ள தொட்டமன்குண்டி கிராமத்திற்கு வந்தார்.
தொட்டமன்குண்டியில் உள்ள தனது மாமியார் வீட்டில் தங்கியிருந்ததாக தெரிகிறது. ஆனால், கடன் கொடுத்தவர்கள் அங்கேயும் சென்று பணத்தை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். கடன்காரர்கள் தினமும் வந்த தொல்லை செய்ததால் மன உளைச்சளில் இருந்த ராஜு குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்ததாக தெரிகிறது.
அதன்படி, ராஜு, அவரது மனைவி மங்கலம்மா(28), மகன்கள் ஆகாஷ்(9), கிருஷ்ணா(13), ராஜுவின் மாமியார் சொல்லபுரதம்மா(48), அவரது இளைய மகள் சவிதா(24), சவிதாவின் மகள் தர்ஷினி(4) ஆகிய ஏழு பேரும் தற்கொலைக்கு முயன்றனர்.
இதையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் ராஜுவின் மனைவி உயிரிழந்துவிட்டார். மற்ற 6 பேரின் உடல்நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: காதலிப்பதாக கூறி 17 வயது சிறுவன் கடத்தல்.. போக்சோவில் 33 வயது பெண் கைது..