கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால், டிவிசி (Damodar Valley Corporation dams) அணைகள் திறக்கப்பட்டன. இதன் காரணமாக, புர்பா பர்தாமன், பாசிம் பர்தமான், பாசிம் மெடினிபூர், ஹூக்லி, ஹவுரா உள்ளிட்ட தெற்கு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தவும், நிவாரணப் பொருள்கள் தடையின்றி வழங்கவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அந்த வகையில் இதுவரை 2.5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதற்காக இந்திய விமானப்படையின் 31 ஹெலிகாப்டர்கள், படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. வெள்ளத்தால் மட்டுமல்லாமல், கடந்த ஒரு வாரத்தில் பிர்பும் மாவட்டத்தில் மூன்று பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: தொடர் மழை - உபரி நீர் திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை