ETV Bharat / bharat

Pocso: 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. 64 வயது முதியவருக்கு 95 ஆண்டுகள் தண்டனை - முதியவருக்கு 95 ஆண்டு சிறை தண்டனை

கேரளாவில் 2018ஆம் ஆண்டு 10 வயது சிறுவனை மிரட்டி பல முறை பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 64 வயதான முதியவருக்கு நீதிமன்றம் 95 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

Pocso Case
Pocso Case
author img

By

Published : Jun 23, 2023, 1:42 PM IST

திருச்சூர் (கேரளா): 10 வயது சிறுவனை பாலியல் வன்புணர்வு செய்த 64 வயது முதியவருக்கு 95 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், நான்கரை லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சாலக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர் கிளிகளை பிடித்து விற்பனை செய்து வந்து உள்ளார்.

அவரிடம் 10 வயது சிறுவன் கிளிகள் வாங்குவதை வழக்கமாக வைத்து உள்ளான். அப்போது, சிறுவனை அந்த முதியவர் மிரட்டி பலமுறை பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார். இது குறித்து சிறுவன் யாரிடமும் சொல்லாமல் இருந்த நிலையில், பாலியல் தொல்லை தொடர்ந்து வந்ததால் சிறுவன் இச்சம்பவம் குறித்து அவனது நண்பர்களிடம் தெரிவித்து உள்ளான். அப்போது, இந்த சம்பவம் நடந்தபோது சிறுவனுக்கு 10 வயது என்றும், முதியவருக்கு 60 வயது என்றும் கூறப்படுகிறது.

பின்னர், தகவல் அறிந்த சிறுவனின் நண்பர்கள் இது குறித்து முதியவரிடம் சென்று கேட்டு உள்ளனர். அதற்கு முதியவர் சிறுவனின் நண்பர்களையும் மிரட்டி உள்ளார். இதனையடுத்து சிறுவனின் நண்பர்கள் இந்த சம்பவம் குறித்து சிறுவனின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சிறுவனின் குடும்பத்தினர் முதியவர் குறித்து மாலா காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கு குறித்து சர்க்கிள் இன்ஸ்பெக்டர்கள் கே.கே.பூபேஷ், சஜின் ஷாஷி ஆகியோர் விசாரித்து வந்தனர். இதனையடுத்து வழக்கின் குற்றப்பத்திரிகையை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சஜின் ஷஷி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அப்போது, அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் பாபுராஜ் நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முதியவருக்கு 95 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்ததுடன், நான்கரை லட்சம் அபராதமும் விதித்தது. மேலும், அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு வழங்க உத்தரவிட்டது. இதேபோல் கண்ணூரில் 8 வயது மகனுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தைக்கு 90 ஆண்டுகள் நீதிமன்றம் தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது.

கண்ணூர் அருகே தனது எட்டு வயது மகனை பாலியல் வன்புணர்வு செய்த 44 வயது தந்தைக்கு 90 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தளிபரம்பா விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் 1.25 லட்சம் அபராதம் விதித்தும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜேஷ் உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் நடந்தபோது சிறுவனுக்கு வயது 8 என்றும், சிறுவனின் தந்தைக்கு வயது 40 என்றும் கூறப்படுகிறது. குழந்தையின் தந்தை 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த நபரின் மனைவி அவரது மகன்களுடன் அவரது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார்.

இதையும் படிங்க: ‘தென்காசியில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு’ - போலீஸ் தீவிர விசாரணை!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.