ஆந்திரா : குண்டூர் மாவட்டத்தில் உள்ள லங்காவனிடிபா கிராமத்தில் ஒரு இறால் பண்ணையில் ஒடிசா, பிகாரைச் சேர்ந்த ராம்மூர்த்தி, கிரண், மனோஜ், பாண்டபோ, மகேந்திரா, நவீன் ஆகிய ஆறு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். இந்நிலையில் இன்று இவர்கள் ஆறு பேரும் உறங்கிக்கொண்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் அறிந்து வந்த காவல் துறையினர் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து உள்ளூர்வாசிகள் கூறுகையில், இவர்கள் ஆறு பேரும் தூங்கிக் கொண்டிருக்கும் போது மின்சாராம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.
காவல் துறையினர் தெரிவிக்கையில், தடவியல் நிபுணர்களை கொண்டு சோதனை செய்ததில் ப்ளீச்சிங் பவுடர், இன்னும் சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்தச் சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய எதுவும் இல்லை.
இதுகுறித்து மின்சார துறை அலுவலர்கள், பிற அலுவலர்களுடன் பேசிவருகிறோம். தற்போது பண்ணையின் உரிமையாளரையும், மேலாளரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கணவனை கொன்ற மனைவி - குடும்ப தகராறு காரணமாக வெறிச்செயல்