டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் 1.79 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், சிகரெட்கள் ஆகியவற்றை கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆறு பேரை சுங்கத்துறை அலுவலர்கள் கைது செய்துள்ளனர்.
துபாயிலிருந்து டெல்லிக்கு வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் 10 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம், சிகரெட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து சுங்கத்துறை அலுவலர்கள் வெளியிட்ட அறிக்கையில், "தீவிர சோதனையின்போது, எஸ்ஸி லைட்/கோல்டு ஸ்பெஷல், பைன், துன்ஹில் ஸ்விட்ச், கோல்ட் ப்ளேக் உள்ளிட்ட பிராண்ட்களை சேர்ந்த 7.52 லட்ச சிகரெட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதன் மதிப்பு, 1.15 கோடி ரூபாயாகும். அதுமட்டுமின்றி, 1.26 கிலோ தங்க பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் மதிப்பு, 64 லட்சம் ரூபாயாகும். இதனை அவர்கள் உடலுக்குள் மறைத்து வைத்து கடத்தியுள்ளனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.