புதுச்சேரி உப்பளம் பகுதியில் உள்ள கோலாஸ் நகரில், கொள்ளை அடிக்க முயற்சி செய்ய உள்ளதாக, ஒதியன் சாலை காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, காவல் உதவி ஆய்வாளர் பிரபு தலைமையிலான குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, வீச்சரிவாளுடன் கொள்ளை அடிக்க முயற்சி செய்ய இருந்த வாண்ரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தீனா, முதலியார் பேட்டை பகுதியைச் சேர்ந்த அருண்குமார், உப்பளம் பகுதியைச் சேர்ந்த ஜான் போஸ்கோ, ஜான்சன், ராஜு உட்பட ஆறு இளைஞர்களை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
இதனையடுத்து, அவர்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களை பறிமுதல்செய்த காவல் துறையினர், அறு பேரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.