தெலங்கானா மாநிலம், சூர்யாபெட் மாவட்டத்தில் நடைபெற்ற கபடிப் போட்டியில் பார்வையாளர்கள் அமர்ந்திருந்த கேலரி ஒன்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 160க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆறு பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், கேலரி இடிந்து விழுந்ததற்கு தரமற்ற மரமும், பொருள்களும்தான் காரணம் என அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த விபத்துக்கான சரியான காரணம் என்னவென்று விசாரணையின்போது தெரிய வரும் என காவல் துறையினர் கூறியுள்ளனர்.
இந்நிலையில், பார்வையாளர்கள் கேலரி இடிந்து கீழே விழுந்த காணொலி ஒன்று உள்ளூர் தொலைக்காட்சி செய்தி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. விபத்து குறித்து அம்மாவட்ட டிஎஸ்பி ஆர்.பாஸ்கரன், "நாங்கள் தொடர்ந்து கேலரியையும் மருத்துவமனையில் உள்ள சூழ்நிலையையும் \கண்காணித்து வருகிறோம்" என்றார்.
47ஆவது ஜூனியர் தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டி தொடங்குவதற்கு முன்னர் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்தப் போட்டியை தெலங்கானா கபடி சங்கமும் சூரியபெட் மாவட்ட கபடி சங்கமும் இணைந்து நடத்தின.
இதையும் படிங்க: மார்ச் 26 விவசாயிகள் பாரத் பந்த்- அடிபணியுமா மத்திய அரசு!