டெல்லி: ஜாகிங் மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வதை வாடிக்கையாக கொண்டு இருப்பவரை கூட குளிர்காலம் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவிற்கு கட்டிப்போட்டு விடுகிறது. கொட்டும் பனி மற்றும் குளிர்ச்சியான தட்வெட்பம் உள்ளிட்ட காரணங்களால் சாதாரண நாட்களில் வெளியே கிளம்பும் சராசரி நேரத்தை கூட குளிர்காலம் எடுத்துக் கொள்கிறது.
வெயில் காலத்தில் ஒருவர் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளை காட்டிலும் குளிர்காலத்தில் அது பெரியளவில் கட்டுப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. குளிர்காலத்தில் வீட்டை விட்டு வெளியேற முடியாத வகையிலும், ஜாகிங், உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாமலும் படுக்கையிலே கட்டிப்போடப்பட்டு சோம்பேறிகளாக மாறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
வெயில் காலம் வரும் வரை உங்களை சுறுசுறுப்பாக வைக்க வேண்டும் என்பது உங்கள் இலக்காக இருந்தால், எளிதான சிறு சிறு மாற்றங்களை செய்ய தயாராக நீங்கள் இருந்தால், இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுங்கள்.
வீட்டுக்குள்ளே உடற்பயிற்சி செய்யுகள்:
வீட்டிற்குள்ளேயே ஸ்டரேச்சிங்(Stretching) பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். இது நீங்கள் வெளியே செல்லும் போது உங்கள் உடல் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யும். வேலைகளை தொடங்குவதற்கு முன் சிறிது நேரம் ஸ்ட்ரேச்சிங் (Stretching) பயிற்சிகள் மேற்கொள்வதனால் உடல் வெப்பநிலை சமனாக வைக்க உதவும். உடற்பயிற்சிக்காகவோ, அல்லது வேறெதும் பணிகளை மேற்கொள்ளவோ வீட்டை விட்டு வெளியேறவும் குளிர்ச்சியை கட்டுப்படுத்தவும் உதவும்.
சரியான உடைகளை அணிந்து கொள்ளுதல்:
பருத்தி ஆடைகள் ஈரத்தை உறிஞ்சி உடலில் தட்பவெட்ப நிலையை மாற்றி குளிரச் செய்வதால் பெரும்பாலான மக்கள் அதை தவிர்க்கின்றனர். அதேநேரம் வெயில் காலத்தில் தலைகீழ் நிலைமையாக காணப்படுகிறது. குளிர்காலத்தில் பருத்து கலந்த உடை அல்லது 50 சதவீதத்திற்கு நிகராக பருத்தி மற்றும் செயற்கை பருத்தி கலந்த ஆடைகளை மக்கள் அணிவது நல்லது.
இனிமையான இசை:
உடற்பயிற்சி உள்ளிட்ட பணிகளை மெல்லிய பின்னணி இசையுடன் மேற்கொள்ளும் போது சாதாரண சூழலை காட்டிலும் அப்பணியில் அதிக ஈடுபாட்டை ஏற்படுத்தி தரும் நிலை உருவாகிறது. இசை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் புத்துணர்ச்சியை தரக் கூடியது.
கூட்டாக உடற்பயிற்சி
நீங்கள் விரும்பும் நண்பர் அல்லது ஒர்க் அவுட் பார்ட்னருடன் உடற்பயிற்சி மேற்கொண்டால் அது கூடுதல் உந்து சக்தியை தரும். மேலும் விரும்பும் நண்பருடன் சேர்ந்து வேலை செய்வது வேடிக்கையான அனுபவத்தை தரும். மேலும், யாரோ ஒருவர் உங்களுடன் உடற்பயிற்சியோ அல்லது வேறு பணிகளோ மேற்கொள்ள காத்திருக்கிறார் என்ற ஆவலே, நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை தவிர்பதற்கான எண்ணங்களை குறைக்கும்.
இதையும் படிங்க: ஈ.பி.எஸ். குறித்து கருத்து வெளியிட அறப்போர் இயக்கத்திற்கு இடைக்காலத்தடை