ETV Bharat / bharat

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: வெல்லப் போவது யார்? - அஸ்ஸாம்

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று (மே.2) காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பணிகள் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: வெல்லப்போவதுயார்?

author img

By

Published : May 2, 2021, 7:20 AM IST

வாக்கு எண்ணிக்கை:

தமிழ்நாடு உட்பட புதுச்சேரி, மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளா ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில், இதன் முடிவுகள் மே 2ஆம் தேதியான இன்று வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

கரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையம் ஏற்கனவே தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. இதை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கைக்கு பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. இதன்படி முகவர்கள் முகக்கவசம் அணிந்து கிருமிநாசினி பயன்படுத்திய பின் அறைக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் போன்ற விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒரு சில தொகுதிகளுக்கு தேர்தல் முடிவுகள் வெளியாக நள்ளிரவு ஆகலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் முகவர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி அவர்கள் கரோனா நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், பாதுகாப்பிற்காக இராணுவத்தினரும், உள்ளூர் காவல் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும், வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வெளியே காவல் துறையினர் பாதுகாப்பில் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி சான்றிதழ் பெறும்போது இரண்டு நபர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.