பாட்னா: ககாரியா மாவட்டத்தின் வங்கி ஒன்றில் நடந்த தவறு காரணமாக ஒருவரின் வங்கிக் கணக்கில் 5. 50 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. கிராமீன் வங்கி வாடிக்கையாளரான அவர், தனது கணக்கில் விழுந்த ரூபாய் பிரதமர் மோடி கொடுத்தது எனக் கூறி பணத்தை தர மறுத்துள்ளார்.
இதையடுத்து வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையிலடைத்தனர். கிராமீன் வங்கியின் தவறு காரணமாக பக்தியார்பூரைச் சேர்ந்த ரஞ்சித் ராம் என்பவர் வங்கிக் கணக்கில்தான் 5. 50 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. வங்கியின் முக்கிய அலுவலர்கள் பலரும், அந்தப் பணம் உங்களுடையது அல்ல; அதை திருப்பிக் கொடுங்கள் என ரஞ்சித் ராம் உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், இது பிரதமர் மோடி தந்த பணம் என அவர் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்திருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல், ரஞ்சித் ராம் அந்த பணம் அனைத்தையும் எடுத்து செலவு செய்யத் தொடங்கியிருக்கிறார். இதனால் பதறிப்போன வங்கி மேலாளர், அவர் மீது மான்சி காவல் நிலையத்தில் மோசடி புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் ரஞ்சித் ராம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஜேஇஇ மெய்ன் தேர்வு முடிவுகள்: 18 மாணவர்கள் முதலிடம், 44 பேர் 100% மதிப்பெண்கள்