டெல்லி ரஜோரி பகுதியில் தொடர்ந்து கொள்ளைச் சம்பவம் அரங்கேறி வருகின்றன. இது குறித்து புகார்கள் அதிகரித்து வந்தன.
இந்நிலையில் செல்போன் பறிக்கும் கும்பல் குறித்து காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்ற காவலர்கள் அங்கிருந்த 5 பேரை கையும்- களவுமாக கைது செய்தனர்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் மீது 50க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இவர்களிடமிருந்து துப்பாக்கி தோட்டாக்கள், கத்தி, இருசக்கர வாகனம் மற்றும் 11 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.