புதுச்சேரி மாநிலத்தில் மொத்தமுள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்கியது.
புதுச்சேரி 30 தொகுதி
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மனுதாக்கல் புதுச்சேரி 30 தொகுதியிலும் நேற்று (மார்ச் 19) மாலை 3 மணியுடன் முடிந்தது. கடைசி நாளான நேற்று அனைத்துத் தேர்தல் அலுவலர்கள், அலுவலகங்கள் களைகட்டின.
கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் ஆதரவுடன் ஊர்வலமாக வந்து, மனு தாக்கல்செய்தனர். இதனால் நகரின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
489 வேட்புமனுக்கள்
இதுவரை, 489 நபர்கள் வேட்புமனுக்களைத் தாக்கல்செய்துள்ளனர். அதிகபட்சமாக என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி போட்டியிடும் ஏனாம் தொகுதியில் 24 பேர் மனு தாக்கல்செய்துள்ளனர்.
மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (மார்ச் 20) நடைபெறுகிறது. இப்பணிகள் முடிந்து போட்டியிட தகுதியுடைய வேட்பாளர்கள் பெயர் வரிசைப்படுத்தப்பட உள்ளது.
சுயேச்சைகளுக்குச் சின்னம்
வரும் திங்கள்கிழமை (மார்ச் 22) விருப்பபடுவோர் மனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டு சுயேச்சை வேட்பாளர்களுக்குச் சின்னம் ஒதுக்கப்படும் பணி நடக்கவிருக்கிறது.
இதுவரை, புதுச்சேரியிலுள்ள 30 தொகுதிகளில் 489 பேர் வேட்புமனு தாக்கல்செய்துள்ளனர்.
இதையும் படிங்க: 'ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 58 வேட்புமனு தாக்கல்!'