இந்தியாவில் கோவிட் இரண்டாம் அலையை எதிர்கொள்ள மத்திய மாநில அரசுடன் சேர்ந்து, ராணுவமும் தீவிர களப்பணியில் ஈடுபட்டுவருகிறது. ஆக்ஸிஜன் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்களை எடுத்து வருவதற்காக, இந்திய ரயில்வே உடன் சேர்த்து விமானப் படையும், மத்திய அரசு களமிறக்கியுள்ளன.
அதன்படி இந்திய விமானப் படையைச் சேர்ந்த 42 விமானங்கள் கோவிட்-19 களப்பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறது. இதில் 12 கனரக விமானங்களும், 30 மிதரக விமானங்களும் அடக்கம் என ஏர் மார்ஷல் ராண்டே தெரிவித்துள்ளார். வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள உதவிகளையும் சேர்த்து விமானப் படை சார்பில், இதுவரை 72 ஆக்ஸிஜன் கண்டெய்னர்கள் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.