டெல்லி: நாடு முழுவதும் ஒமைக்ரான், கரோனா தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. தலைநகர் டெல்லியில் நேற்று மட்டும் (ஜன.8) 20 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. மேலும், உருமாறிய தொற்று வகையான ஒமைக்ரானுக்கு 513 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்திய ஜனநாயகத்தின் அடையாளமாக விளங்கும் நாடாளுமன்றத்தில் பணிப்புரியும் பணியாளர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த 6, 7 ஆகிய இரண்டு தேதிகளில் மட்டும் சுமார் 400 பணியாளர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகிறது.
நாட்டின் பல மாநிலங்களில் மூன்றாம் அலை அச்சுறுத்தல் எழுந்துள்ளதால், பிரதமர் நரேந்திர மோடி, உயர் அலுவலர்களுடன் இன்று (ஜன.9) மாலை 4.30 மணிக்கு உயர் அலுவலர்கள் உடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒன்றரை லட்சத்தை கடந்தது தொற்று பாதிப்பு; 327 பேர் உயிரிழப்பு