கீவ் (உக்ரைன்): உக்ரைன் மீது ரஷ்யா இன்று (மார்ச்.1) 6ஆவது நாளாக தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டிலிருந்து மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
இந்த தாக்குதலில் இரு நாட்டின் தரப்பிலும் உயிர்ச்சேதம், பெருட்சேதம் கடுமையாக ஏற்பட்டிருக்கிறது. உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டித்து ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் கடுமையான தடைகளை விதித்து வருகின்றன.
இதையடுத்து, நேற்று (பிப்.28) பெலாரஸ் நாட்டில் ரஷ்யா-உக்ரைனிடையே 5 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்கு மத்தியில் உக்ரைனின் கீவ் நகரில் தாக்குதல் நடைபெற்றது. கீவ் நகரை குறிவைத்து ரஷ்யப் படைகள் முன்னேறி வருகின்றன.
கவச வாகனங்கள், டாங்கிகள், பீரங்கிகளுடன் நகரின் மையத்தில் 17ஆவது மைலில் (25 கி.மீ) இருந்து 40ஆவது மைல் வரை ரஷ்ய ராணுவம் அணிவகுத்து நிற்கிறது என மேக்ஸார் டெக்னாலஜி நிறுவனத்தின் செயற்கைக்கோள் புகைப்படத்தில் தெரியவந்துள்ளது.
ஒருபுறம் ரஷ்யப்பேச்சுவார்த்தைக்கு தயார் எனக் கூறிக்கொண்டு, மற்றொரு புறம் தாக்குதலை தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
முன்னதாக ரஷ்யா அதிபர் புடின் தங்கள் நாட்டு அணு ஆயுதப் படையைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரஷ்யா-உக்ரைன் போர்: குடியரசு தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு