மாநில உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஜம்மு-காஷ்மீர் அரசால் 1990ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கைபடி, 1990ஆம் ஆண்டுக்குப் பிறகு பாதுகாப்பு காரணங்களை கருதி வெளியேறியதாக 44 ஆயிரத்து 167 குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 39 ஆயிரத்து 782 இந்து குடும்பங்கள் உள்ளன.
மேலும் 1,997 பேருக்கு பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் வேலை கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவர்கள் விரைவில் காஷ்மீர் வரவுள்ளனர்.
காஷ்மீருக்கு திரும்பி வரும் புலம் பெயர் இளைஞர்களை தங்க வைக்க அரசு குடியிருப்பு வசதிகளையும் செய்துள்ளது. இவர்களுக்காக 6 ஆயிரம் குடியிருப்பு பிரிவுகள் விரைவாக கட்டப்பட்டுவருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாடாளுமன்றத்தில் அமளி: ஜோதிமணி உள்ளிட்ட 12 எம்பிக்களை இடைநீக்கம் செய்ய முடிவு!