தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் ராஜேந்திர நகரில் பி.வி.நரசிம்மராவ் தெலங்கானா கால்நடை பல்கலைக்கழகம் (PVNRTVU) செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் இளங்கலை கால்நடை அறிவியல் படிக்கும் இரண்டாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள், ஜூனியர் மாணவர்களை ரேகிங் செய்துள்ளனர்.
இதுகுறித்து ரேகிங்கில் உட்படுத்தப்பட்டவர்கள், பல்கலைக்கழக முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் குறித்து விசாரிக்க, பேராசிரியர்கள் கொண்ட குழுவை அமைத்து விசாரிக்க முதல்வர் உத்தரவிட்டார். இதன் பேரில் இக்குழு மாணவர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டது.
விசாரணையின் அடிப்படையில், ரேகிங்கில் ஈடுபட்ட 34 மாணவர்கள் வகுப்புகள் மற்றும் விடுதிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 25 பேர் வகுப்புகள் மற்றும் விடுதிகளிலும், மீதமுள்ள 9 பேர் விடுதிகளில் தங்கவும் மற்றும் பல்கலைக்கழக வாகனங்களில் ஏறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இரண்டு வாரங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தன்னைத்தானே கடத்தி காசு கேட்ட கமிஷன் ஏஜென்ட் - நாடகமாடியது அம்பலம்