புதுச்சேரி: மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் 32 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,151 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,974 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 1,585 பேருக்கும், காரைக்காலில் 255 பேருக்கும், ஏனாமில் 111 பேருக்கும், மாஹேவில் 10 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 17,666 பேர் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 65,689 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 25 பேர், காரைக்காலில் 6 பேர், ஏனாமில் ஒருவர் என, மொத்தம் 32 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை மொத்தமாக 84,506 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சாலையில் கரோனா சடலம்: பொய்யான செய்தியை பதிவிட்ட நபருக்கு போலீஸ் வலை!