புவனேஸ்வர்: மும்பையிலிருந்து புவனேஸ்வர் செல்லும் கோனார்க் எக்ஸ்பிரஸில் நேற்று(மார்ச் 3) சந்தேகத்திற்கிடமாக நான்கு பேர் பயணம் செய்தனர். இதன்காரணமாக ரயில்வே காவலர்கள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது நான்கு பேரும் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளனர். இதையடுத்து காவலர்கள் அவர்களது உடமைகளை சோதனையிட்டனர்.
இந்த சோதனையில் நான்கு பைகளில் தலா 8 கிலோ தங்க நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறை தரப்பில், இந்த வழக்கு தொடர்பாக ஹஸ்முக்லால் ஜெயின், சுர்சே சஹாதேவ் கரே, மகேஷ் போம்சர், தீபக் படேல் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மும்பையை சேர்ந்தவர்கள். பறிமுதல் செய்யப்பட்ட 32 கிலோ தங்கத்தின் மத்திப்பு ரூ. 16 கோடி. இந்த நகைகளுக்கு உரிய ஜிஎஸ்டி ஆவணங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் ரூ.40.55 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்