இந்தியாவில் கடந்த மூன்றாண்டுகள் நடைபெற்ற மனித யானை மோதல் சம்பவங்கள் குறித்து மாநிலங்களவை உறுப்பினர் வைகோ, ஒன்றிய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அமைச்சர் பூபேந்தர் யாதவ் விரிவான பதில் அளித்துள்ளார். அதில், "மனித-யானை மோதல் காரணமாக 2018-19, 2019-20, 2020-21 ஆகிய மூன்று ஆண்டுகளில் முறையே 115, 99, 87 யானைகள் உயிரிழந்துள்ளன. இதே காலகட்டங்களில் 457, 585 மற்றும் 359 என்ற எண்ணிக்கையில் மனிதர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தப் புள்ளிவிவரப்படி, கடந்த மூன்றாண்டுகளில் மனித-யானை மோதல் காரணமாக 301 யானைகளும், 1,401 மனிதர்களும் உயிரிழந்துள்ளனர்.
இந்த மோதலை தவிரக்க மாநில அரசுடன் இணைந்து அமைச்சகம் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதற்காக 'Project Elephant' என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுவரை யானைகள் எண்ணிக்கை அதிகம் கொண்ட 14 மாநிலங்களில் 30 சரணாலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஊடகத்துறையில் ஆர்வம் உள்ளவங்க இதை பயன்படுத்திக்கோங்க..!