ETV Bharat / bharat

போலி தங்க நாணயங்களை வைத்து ரூ.30 லட்சம் மோசடி - போலி தங்க நாணயங்களை வைத்து மோசடி

கர்நாடகாவில் போலி தங்க நாணயங்களை வைத்து சுமார் 30 லட்ச ரூபாயை மோசடி செய்த கும்பலை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி தங்க நாணயங்களை வைத்து ரூ.30 லட்ச ரூபாய் மோசடி ; ஒருவர் கைது

author img

By

Published : Sep 30, 2022, 6:47 PM IST

கர்நாடகா மாநிலம் தாவணகெரே மாவட்டம் முழுவதும் போலி தங்க நாணயங்களைக் காட்டி பண மோசடி சம்பவங்கள் நடப்பது அதிகரித்துள்ளது. ஒரு கும்பல் தங்களிடம் புதையல் கிடைத்துள்ளதாக கூறி போலி தங்க நாணயங்களை மக்களிடம் விற்றுவருவதாக புகார்களும் எழுந்தன. குறிப்பாக கேரளாவில் ரூ.30 லட்ச ரூபாய் ரொக்கப் பணம் கொடுத்து போலி தங்க நாணயங்களை வாங்கிய சம்பவமும் நடந்துள்ளது.

போலி தங்க நாணயங்களை வைத்து ரூ.30 லட்ச ரூபாய் மோசடி ; ஒருவர் கைது
போலி தங்க நாணயங்களை மோசடி

இதுகுறித்து தாவணகெரே காந்திநகர் போலீசார் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தகவல்களை பெற்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் நேற்று(செப்.29) கைது செய்யப்பட்டார். அவரது பெயர் கிரிஷ் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ.22 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து எஸ்.பி ரிஷ்யாந்த் கூறுகையில், இந்த மோசடியில் ஈடுபட்ட ஏனைய குற்றவாளிகள் வெவேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களையும் வலைவீசித் தேடி வருகிறோம். வித்யா நகர், ஆர்.எம்.சி யார்டு, கேடிஜே நகர், சந்தேபென்னூர், ஜகலுரு, காந்தி நகர் உள்ளிட்ட காவல்நிலையங்களில் இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாம்பு பிடிப்பவரின் உதட்டை கடித்த நாகப்பாம்பு; வைரல் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.