ETV Bharat / bharat

காஷ்மீரில் 30 கிலோ ஐஇடி வெடிகுண்டு கண்டெடுப்பு! - IED defused by security forces

ஸ்ரீநகர் தங்புரா பந்த் பகுதி அருகே  30 கிலோ ஐஇடி வெடிகுண்டு, பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

30 கிலோ ஐஇடி வெடிகுண்டு கண்டுபிடிப்பு
30 கிலோ ஐஇடி வெடிகுண்டு கண்டுபிடிப்பு
author img

By

Published : Jul 20, 2021, 6:17 PM IST

Updated : Jul 20, 2021, 7:06 PM IST

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் 30 கிலோ மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் சாதனத்தை (ஐஇடி) பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த நடவடிக்கையால், நிகழவிருந்த பயங்கர வெடி விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தங்புரா பந்த் அருகே வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில், 24 ஆர்.ஆர். மற்றும் உள்ளூர் காவல் துறையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அப்போது, நெடுஞ்சாலையிலிருந்து 700 மீட்டர் தொலைவில் 30 கிலோ ஐஇடி வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை, வெடிகுண்டு வல்லுநர்கள் பாதுகாப்பாகச் செயலிழக்கச் செய்தனர்.

அப்பகுதியில் மேலும் குண்டுகள் இருக்க வாய்ப்புள்ளதால், தீவிர சோதனை நடத்தப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: சுதந்திர தினத்தன்று ட்ரோன் தாக்குதலுக்கு வாய்ப்பு!

Last Updated : Jul 20, 2021, 7:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.