பீகார்: அவுரங்கபாத்தின் சாஹேப்கஞ்ச்சின் 24 வது வார்டில் உள்ள அனில் கோஸ்வாமி என்பவரது வீட்டில் இன்று (அக்-29) அதிகாலை சத் பூஜை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. சத் பூஜைக்கான பிரசாதம் சமைத்து கொண்டிருக்கும் போது திடீரென சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காவல்துறையினர் உட்பட 30 பேர் படுகாயமடைந்தனர்.
தீ பிடித்தவுடன் அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீ வேகமாக பரவியது. பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதில் சில தீயணைப்பு வீரர்களும் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள அவுரங்கபாத் சதார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் 25 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:இண்டிகோ விமானத்தில் தீ... பயணிகள் அச்சம்... டெல்லியில் அவசர தரையிறக்கம்...