ETV Bharat / bharat

அசாம் பாஜக அமைச்சரைக் கொல்ல சதி? உல்பாவைச் சேர்ந்த மூவர் கைது

author img

By

Published : Mar 10, 2021, 1:18 PM IST

அசாமைச் சேர்ந்த பாஜக அமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மாவைக் கொல்ல திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Himanta Biswa Sarma
ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா

பாஜக மூத்த தலைவரும் அசாம் மாநில நிதியமைச்சருமான ஹிமந்த பிஸ்வாஸ் சர்மாவைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக உல்பா அமைப்பைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கர ஆயுதங்கள், வெடிபொருள்களைக் கொண்டு ஹிமந்த பிஸ்வாஸ் சர்மாவை கொல்ல இவர்கள் ரகசியத் திட்டம் தீட்டியதாக காவல்துறைக்கு துப்பு கிடைத்ததன் பேரில், இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அசாம் காவல்துறை உயர் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட மூவரில் உல்பா அமைபின் துணைத் தலைவர் பிரதிப் கோகாயும் அடக்கம். இம்மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த காவல்துறை, பின்னர் தனது விசாரணைக்காக ரிமான்ட் செய்துள்ளது. வரும் மார்ச் 27ஆம் தேதி அசாமில் சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்கவுள்ள நிலையில், அதன் பின்னணியில் இந்தக் கைது சம்பவம் நிகழ்ந்துள்ளது கவனத்தை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: உத்தரகாண்டின் புதிய முதலமைச்சராக தீரத் சிங் ராவத் தேர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.