பாலகாட் (மத்தியப் பிரதேசம்): பாலகாட் மாவட்டம், கட்லா கிராமத்தில் காவல் துறையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் மூன்று நக்சல்கள் இன்று (ஜூன் 20) சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், "கொல்லப்பட்ட நக்சல்கள் நாகேஷ், மனோஜ், ரமே என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தங்கள் உயிரைப் பணயம் வைத்து நக்சல்களை கொன்ற காவலர்களுக்கு பதவி உயர்வு, வீரதீர செயலுக்கான விருது வழங்கப்படும். காவலர்களின் துணிச்சலான செயலுக்கு பாராட்டுகள். உங்களைப் போன்ற ஹீரோக்களால் மத்தியப் பிரதேசம் பெருமிதம் கொள்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், மத்தியப் பிரதேசத்தின் அமைதியை சீர்குலைக்க முயன்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சவுகான் எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: புல்வாமாவில் பயங்கரவாதி சுட்டுக்கொலை