ETV Bharat / bharat

ஐஎன்எஸ் கப்பல் வெடிவிபத்து: மூன்று கடற்படை வீரர்கள் உயிரிழப்பு - ஐஎன்எஸ் ரன்வீர் கப்பல் வெடிவிபத்து

மும்பையில் ஐஎன்எஸ் ரன்வீர் கப்பலில் ஏற்பட்ட வெடிவிபத்து காரணமாக கடற்படை வீரர்கள் மூன்று பேர் உயிரழந்தனர். 11 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

INS Ranvir at Naval Dockyard
INS Ranvir at Naval Dockyard
author img

By

Published : Jan 18, 2022, 11:41 PM IST

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐஎன்எஸ் ரன்வீர் கப்பலில் இன்று(ஜன.18) எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக கடற்படை வீரர்கள் மூன்று பேர் உயிரழந்தனர். 11 பேர் படுகாயமடைந்தனர். இதனையறிந்த, கடற்படையினர் விரைவில் தீயை கட்டுக்குள்கொண்டுவந்தனர்.

காயமடைந்த வீரர்களை மீட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, மும்மை கடற்படை தளம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கப்பல் வெடிவிபத்து உடனடியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. உயிரிழந்தவர்களின் விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும். காயமடைந்தவர்கள் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐஎன்எஸ் ரன்வீர் கப்பல் கிழக்கு கடற்கரை பாதுகாப்புக்கு அனுப்படவிருந்தது. இதேபோல மும்பையில் கடற்படை தளத்தில் 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐஎன்எஸ் சிந்துரக்ஷக் என்ற நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து மூழ்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ARMY DAY: இந்திய ராணுவம் வெளியிட்ட மிரட்டல் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.