ETV Bharat / bharat

மேற்கு வங்கத்தை மிரட்டிய மின்னல்... ஒரே நாளில் 27 பேர் பலி! - மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தில் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் மின்னல் தாக்கியதில் கிட்டத்தட்ட 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

West Bengal
மேற்கு வங்கம்
author img

By

Published : Jun 8, 2021, 8:25 AM IST

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இடி மின்னலும் வெளுத்து வாங்கும் மழையில், பல இடங்களில் வீடுகள், மரங்கள் தீப்பிடித்தன.

இந்நிலையில், நேற்று(ஜுன்.7) மட்டும் பல்வேறு இடங்களில் மின்னல் தாக்கியதில் கிட்டத்தட்ட 27 பேர் உயிரிழந்துள்ளனர். மூர்ஷிதாபாத்தில் 9 பேரும், ஹூக்ளியில் 11 பேரும், பங்குராவில் 2 பேரும், கிழக்கு மிட்னாபூர் மற்றும் மேற்கு மிட்னாபூரில் தலா இருவரும், நதியாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாகப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதே போல, காயமடைந்தவர்களுக்குத் தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.