கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் சாம்ராஜ்நகர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த 24 கரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். அதில், 12 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவறிந்த கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா, சாம்ராஜ்நகர் ஆணையரை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்.
சாம்ராஜ்நகர் துணை ஆணையரிடம் தற்போது தான் பேசினேன். மருத்துவமனைக்கு 50 ஆக்சிஜன் சிலிண்டர்கள் உடனடியாக அனுப்பப்பட்டுள்ளது என எம்பி. பிராதப் சிம்ஹா தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கலபூர்கியில் உள்ள மருத்துவமனையில் 4 கோவிட் நோயாளிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.