ஹரியானா மாநிலம் கய்தால் மாவட்டம் திதாரம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீசந்த், குடலிறக்கம் என்ற நோய்க்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்ததில் அவரது வயிற்றில் எண்ணற்ற கற்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சிகிச்சையின் போது, சிறிய மற்றும் பெரிய என்ற அளவில் மொத்தமாக 2,215 கற்களை மருத்துவமனை குழுவினர் நீக்கினர். இதனை எண்ணுவதற்கு ஒன்றரை மணி நேரம் ஆனது. அதன் பின்னர் பேசிய மருத்துவர் பவார், இது உலகத்தில் மூன்றாவது முறையாக நடக்கிறது என்றார்.