ETV Bharat / bharat

பழமையான பிந்த் சிறை: சுவர் இடிந்து விழுந்து 22 கைதிகள் காயம் - பழமையான பிந்த் சிறை

பிந்த் சிறை 150 ஆண்டுகள் பழமையானது. இதன் ஆறாவது சுவர் பகுதிதான் மொத்தமாக இடிந்து விழுந்து சேதமானது.

22 prisoners injured as barrack wall collapses in MP's Bhind Jail

author img

By

Published : Jul 31, 2021, 4:27 PM IST

குவாலியர்: பிந்த் சிறையில் உள்ள சுவர் இடிந்து விழுந்ததில் 22 கைதிகள் காயமடைந்தனர். காலை 5 மணிக்கு இந்த சம்பவம் நடந்தததாக கூறப்படுகிறது; நெரிசல் காரணமாக இது நடந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல் கண்காணிப்பாளர் மனோஜ் சிங், மாவட்ட ஆட்சியர் சதிஷ் குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிந்த் சிறை 150 ஆண்டுகள் பழமையானது. இதன் ஆறாவது சுவர் பகுதிதான் மொத்தமாக இடிந்து விழுந்து சேதமானது. இதுகுறித்து எஸ்பி மனோஜ் சிங், 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை எந்த உயிர் சேதமும் இல்லை. பிந்த் சிறையில் மொத்தம் 255 கைதிகள் உள்ளனர். சம்பவம் நடந்தபோது 64 கைதிகள் மட்டுமே அப்பகுதியில் இருந்தனர். இரண்டு கைதிகளின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என மருத்துவமனையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதையும் படிங்க: எல்லை சச்சரவு- இந்தியா சீனா மீண்டும் பேச்சுவார்த்தை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.