ETV Bharat / bharat

ரயிலில் 20 கிலோ கஞ்சா பறிமுதல் - ஒடிசா இளைஞர்கள் கைது! - 20 kg cannabis seized odisha youths arrested

புவனேஸ்வரில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற விரைவு ரயிலில் போலீசார் நடத்திய சோதனையில் 350 கிராம் கஞ்சா 20 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

புதுச்சேரி ரயிலில் 20 கிலோ கஞ்சா பறிமுதல்- ஒடிசா இளைஞர்கள் கைது

author img

By

Published : Apr 21, 2022, 1:06 PM IST

புதுச்சேரி:புவனேஸ்வரில் இருந்து புதுச்சேரிக்கு வாராந்திர விரைவு எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. அந்த விரைவு ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் புதுச்சேரி ஐ.ஜி சந்திரன் தலைமையிலான காவல்துறையின் சுமார் 20க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி ரயில் நிலையத்தில் புவனேஸ்வர் விரைவு ரயிலில் அதிரடி சோதனை செய்தனர்.

இதில் சந்தேகத்திற்கு இடமான 4 வாலிபர்களை மடக்கி அவர்கள் கொண்டுவந்த பைகளைச் சோதனை செய்தனர். அவர்களிடம் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 36- வயதான உதிர்ஷா சாகு, 26 வயதான திவ்ய ரங்கன் சாகு , 27-வயதான ரஞ்ஜன் 26-வயதான சார்ஜா நாயக், ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 350 கிராம் கஞ்சா மற்றும் 20 கிலோ தடை செய்யப்பட்ட குடகா பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி ரயிலில் 20 கிலோ கஞ்சா பறிமுதல்- ஒடிசா இளைஞர்கள் கைது!

இதனையடுத்து கஞ்சா வைத்திருந்த 4 பேரையும் காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதுகுறித்து ஐ.ஜி.சந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, கஞ்சா கடத்தலை தடுக்கும் வகையில் காவல்துறை பல கட்ட சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கஞ்சா விற்பனை கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது புவனேஸ்வரில் இருந்து புதுச்சேரிக்கு விரைவு ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக வந்த தகவலின் பேரில் ரயிலில் சோதனை நடத்தப்பட்டது. 350 கிராம் கஞ்சா மற்றும் 20 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், கஞ்சா விற்பவர்களைக் குண்டர் சட்டத்தில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதையும் படிங்க:சேலையூரில் சிற்றுண்டி கடையில் கஞ்சா விற்பனை செயதவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.