ETV Bharat / bharat

2021 தேர்தல் முடிவுகள்: வாழ்க்கை மற்றும் பாதுகாப்பிற்கான தீர்ப்பு

மேற்கு வங்கம் மற்றும் கேரளாவைப் போலல்லாமல், அசாமில் பாஜகவுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியான செய்தி உள்ளது. அங்கு சிறுபான்மை வாக்குகள் கட்சியை கைவிடவில்லை. உண்மையில், பழங்குடி மக்களின் அடையாளத்தை பாதுகாப்பது குறித்து காங்கிரஸ் உருவாக்கிய கதை, பாஜகவுக்கு வளர்ச்சி என்ற முழக்கத்துடன் சிறப்பாக உதவியது. இதுகுறித்து விளக்கியுள்ளார் ஈடிவி பாரத் செய்தி ஆசிரியர் பிலால் பட்.

2021 தேர்தல் முடிவுகள்
election results:
author img

By

Published : May 4, 2021, 12:12 PM IST

பாஜகவின் ரதத்தை சக்கர நாற்காலியில் இருந்தபடியே ஒரு பெண் நிறுத்தினாரா அல்லது மேற்கு வங்கத்தில் காவிக்கட்சி ஆட்சிக்கு வந்தால், அது சிறுபான்மையினருக்கு ஆபத்தாக முடியும் என்று நம்ப வைக்கப்பட்டதா? மற்ற அனைத்து முக்கிய மதச்சார்பற்ற கட்சிகளையும் தவிர்த்து, திரிணாமுல் காங்கிரஸிற்கு பின்னால் அணிவகுத்து, சிறுபான்மையினர் தங்கள் வாக்குகளை அளித்ததன் மூலம் மட்டுமே பாஜகவின் ரதம் தடுத்து நிறுத்தப்பட்டது.

மம்தா பானர்ஜியால் மட்டுமே பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுக்க முடியும் என்ற நம்பிக்கை, சிறுபான்மையினரை ஒன்றிணைத்தது. மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு எதிராக செயல்பட்ட வேறு காரணங்களும் உள்ளன, அதனால்தான் அது 2019 மக்களவைத் தேர்தலின் போது வென்ற ஜங்கல் மஹால் தெற்கு பகுதியில் வெற்றிபெற முடியவில்லை. ஜங்கல் மஹால் பகுதியில் பா.ஜ.க.வை தொகுதியிலிருந்து முற்றிலுமாக புறக்கணிக்கும் விதமாக, பெண் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வெளியே வந்து, அவர்கள் திரிணாமுல் காங்கிரஸுக்கு ஆதரவாக வாக்களித்தனர். மாதுவாஸின் சர்வதேசமயமாக்கல் கூட பாஜகவுக்கு அதிக பலனை தரவில்லை.

இது உண்மையில் பாஜகவுக்கு எதிராக, மம்தாவுக்கான மக்கள் தீர்ப்பாகும், அதனால்தான் 2016 சட்டமன்றத் தேர்தலை விட திரிணாமுல் சிறப்பாக செயல்பட்டது. மேலும் பாஜகவுக்கு கிடைத்த காங்கிரஸ், இடது கட்சிகளின் வாக்குகள், மேற்கு வங்கத்தின் தேர்தல் வரைபடத்திலிருந்து காங்கிரஸ், இடதுசாரி போன்றவற்றை அழித்துவிட்டது.

கொல்கத்தாவில் அதிக எண்ணிக்கையிலான இடங்களை எதிர்பார்த்த பாஜகவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. கட்சி மாறி வந்தவர்கள் பல அற்புதங்களை செய்வார்கள் என எதிர்பார்த்த பாஜகவிற்கு அதுவும் சிறப்பாக செயல்படவில்லை. திரிணாமுல் காங்கிரஸில் இருந்து பா.ஜ.க.வுக்கு வந்த பெரும்பாலான உறுப்பினர்கள், ராஜீப் பானர்ஜி, பைஷாலி டால்மியா போன்ற தலைவர்கள் உட்பட, தேர்தலில் தோல்வியடைந்தனர். கட்சிமாறிய உறுப்பினர்களில், மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு தகுதியானவர் என்று சுவேந்து அதிகாரி நிரூபித்தார். கிழக்கு மத்னிப்பூரின் நந்திகிராம் தொகுதியில் இருந்து தற்போதைய முதல்வரை தோற்கடித்து எப்படியோ சமாளித்தார்

கேரளாவும் பாஜகவுக்கு வேறுபட்ட கதை அல்ல, இந்த தேர்தலில் முற்றிலும் தோல்விகளை சந்தித்த பாஜகவிற்கு இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு மாநில சட்டசபையில் இடம் இருக்காது. காவி கட்சி ஆட்சிக்கு வந்தால் தங்கள் இருப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என நம்பி வடக்கு மற்றும் மத்திய கேரளாவின் சிறுபான்மையினர் தங்கள் விசுவாசத்தை மாற்றி, LDF-க்கு தங்கள் வாக்குகளை அளித்தனர். முக்கியமாக, முஸ்லீம் லீக்கின் கோட்டையான வடக்கு கேரளா இடதுசாரிகளுக்கு வாக்களித்தது. அதேபோல் மாநிலத்தின் கணிசமான எண்ணிக்கையிலான கிறிஸ்தவர்களைக் கொண்டுள்ள மத்திய பகுதியும் LDF-க்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்துக்களின் பெரும்பான்மை பகுதியான தெற்குப் பகுதியில் கூட காவிக்கட்சியால் சிறப்பாக செயல்பட முடியவில்லை.

தென் மாநிலத்தில் வாரிசு அரசியலைக் குறித்து அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள், அவர்கள் தீட்டிய திட்டங்கள், தமிழ்நாட்டில் திமுகவை ஆட்சிக்கு கொண்டுவர உதவியது. கருணாநிதியின் வாரிசான மு.க ஸ்டாலின் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், மூன்றாம் தலைமுறை இளவரசரும் சிறப்பாக செயல்பட்டார். ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் இருந்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஜெயலலிதா காரணமாக பெண்களின் பெரும்பான்மை வாக்குகளை அதிமுக பெற்று வந்தது. ஆனால் அதே வாக்குகள் இப்போது திமுகவுக்கு சாதகமாக திரும்பியுள்ளது..

அதிமுகவின் பத்து ஆண்டுகால ஆட்சிக்கு எதிரான அலையால் திமுக ஆட்சிக்கு வந்தது மட்டுமல்லாமல், அடுத்த தலைமுறைக்கு அதிகாரத்தின் தொடர்ச்சியானது சீராக செல்வதை உறுதி செய்கிறது. 45 ஆண்டுகால அரசியல் விசித்திரங்களுக்குப் பிறகு இறுதியாக இளவரசர் எம் கே ஸ்டாலின் மன்னராகிறார். கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒட்டுமொத்த இந்தியாவும் சுகாதார நெருக்கடியுடன் சிக்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் திமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஆட்சி பொறுப்பேற்கும் போது சுகாதார நெருக்கடியால், கட்சி பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அதன் செய்தித் தொடர்பாளர் மனுசுந்தரம் ஞாயிற்றுக்கிழமை கூறியதன் மூலம், திமுக அதன் முன்னுரிமைகள் குறித்து தெளிவாக இருப்பது தெரிகிறது.

மேற்கு வங்கம் மற்றும் கேரளாவைப் போலல்லாமல், அசாமில் பாஜகவுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியான செய்தி உள்ளது. அங்கு சிறுபான்மை வாக்குகள் கட்சியை கைவிடவில்லை. உண்மையில், பழங்குடி மக்களின் அடையாளத்தை பாதுகாப்பது குறித்து காங்கிரஸ் உருவாக்கிய கதை, பாஜகவுக்கு வளர்ச்சி என்ற முழக்கத்துடன் சிறப்பாக உதவியது. பாஜகவின் ஹிமந்தா பிஸ்வா சர்மா போன்ற மிகப் பெரிய ஆளுமை, மக்களை தனது கட்சிக்கு ஆதரவாக திரட்ட முடிந்தபோது, CAA மற்றும் NRC எதிர்ப்பு முழக்கங்கள் காங்கிரஸின் மஹாஜோத்- BPF (போடோலாண்ட் மக்கள் முன்னணி), இடது மற்றும் AIUDF க்கு சாதகமாக செயல்பட முடியவில்லை. பூர்வீக அசாமிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் அஸ்ஸாம் உடன்படிக்கையின் ஆறாம் பிரிவை அமல்படுத்துவதாக பாஜக வாக்குறுதியளித்தது. பத்ருதீன் அஜ்மலை ஒரு வகுப்புவாத சக்தியாகவும், பூர்வீக அசாமியருக்கு அச்சுறுத்தலாகவும் சித்தரித்தது. இவை அனைத்தும் அவரது கூட்டணிக்கு எதிராக மாற்றியது. மாநில காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா, தேர்தலில் தோல்வியுற்றதன் மூலம், மக்கள் ‘மகாஜோத்தை’ ஒரு பொருந்தாக் கூட்டணியாக பார்த்தார்கள் என்பதை காட்டுகிறது..

இப்போது பாஜகவுக்கு முன்னால் உள்ள சவால், தற்போதைய முதலமைச்சருக்கும் ஹிமந்தா பிஸ்வாவிற்கும் இடையில் சமநிலையையும் ஒற்றுமையையும் பேணுவதேயாகும். அதன் கூட்டணி கட்சியான அதிமுகவில், இ. பழனிசாமிக்கும் ஓ பன்னீர் செல்வத்திற்கும் இடையிலான மோதலால் தமிழ்நாட்டில் இரண்டு அணிகளாக பிரிந்ததுபோல, அசாமில் உள்ள பாஜகவும் இதேபோன்ற நெருக்கடியை காணுமா? அல்லது, சோனோவால் மற்றும் பிஸ்வாவின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் ஒரு தீர்வை காவி கட்சி கண்டுபிடிக்குமா?

தற்போதுள்ள சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், சட்டமன்ற உறுப்பினராக இல்லாத மம்தா பானர்ஜி, தனது முதலமைச்சர் பதவியைத் தக்கவைக்க இன்னும் ஆறு மாதங்களில் சட்டமன்ற உறுப்பினராவதை எவ்வாறு உறுதி செய்வார், அவர் எந்தத் தொகுதியிலிருந்து போட்டியிடுவார்? தேர்தலின் போது கோவிட் காரணமாக வேட்பாளர் இறந்ததால் காலியாக இருக்கும் கொல்கத்தாவின் கார்டா தொகுதி மம்தாவை தேர்ந்தெடுக்க காத்திருக்கிறதா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.