ETV Bharat / bharat

அடுத்த 2 மாதங்களில் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் கிடைக்கும் - ஹர்தீப் சிங் பூரி - ஹர்தீப் சிங் பூரி

அடுத்த 2 மாதங்களில் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் நாடு முழுவதும் கிடைக்கும் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

ஹர்தீப் சிங் பூரி
ஹர்தீப் சிங் பூரி
author img

By

Published : Oct 15, 2022, 8:28 AM IST

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் சிதாபுராவில் உள்ள ஜெய்ப்பூர் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 3 நாள் தெற்காசிய புவி அறிவியல் மாநாட்டில் மத்திய பெட்ரோலியம் மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "வளர்ச்சியடைந்து வரும் இந்திய பொருளாதாரத்தை கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உயர்வுகளிலிருந்து பாதுகாக்கும் விதமாக, உலக எரிசக்தி சவால்களை இந்திய அரசு சிறப்பாக எதிர்கொண்டு வருகிறது.

இந்தியாவில் நாளொன்றுக்கு 5 மில்லியன் பீப்பாய்கள் பெட்ரோலியம் பயன்படுத்தப்படுகிறது. இது தற்போது 3 சதவீதம் அதிகரித்து வருகிறது. இது உலக சராசரியில் ஒரு சதவீதத்தை விட அதிகமாகும். பெட்ரோலில் எத்தனால் கலப்பு சதவீதம் 2013ஆம் ஆண்டில் 0.67 சதவீதம் திட்டமிட்டது. 2022ஆம் ஆண்டு மே மாதத்தில் 10 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது 2.7 மில்லியன் டன் கார்பன்டை ஆக்சைடு உமிழ்வைக் குறைத்திருக்கிறது. இது சுற்றுச்சூழலுக்கு மிகவும் நல்லதாகும்.

அடுத்த 2 மாதங்களில் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் நாடு முழுவதும் கிடைக்க உள்ளது. வரும் இரண்டு தசாப்தங்களில் உலகளாவிய எரிசக்தி நுகர்வில் இந்தியா கால் பகுதி அளவுக்கு பங்களிக்கும் என்று சர்வ தேச எரிசக்தி முகமை கணித்துள்ளது. இந்தியாவின் எரிசக்தி தேவை இரட்டிப்பாகும் என்று பிபி புள்ளி விவர மதிப்பீடு கூறியுள்ள நிலையில், 2050ஆம் ஆண்டுக்குள் இயற்கை வாயுவின் தேவை ஐந்து மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலையான சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க புவி அறிவியல் துறையினர் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஞானவாபி மசூதி வழக்கு: 'சிவலிங்கம்' கார்பன் டேட்டிங் வழக்கை நிராகரித்து நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.