போர்பந்தர் : அரபிக் கடலில் மீன்பிடித்த போது சர்வதேச எல்லையை கடந்ததாக பாகிஸ்தானியர்களால் கைதுசெய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் வாடிய இந்திய மீனவர்கள் 20 பேர் விடுவிக்கப்பட்டனர்.
இந்த 20 இந்திய மீனவர்களும் திங்கள்கிழமை (ஜன.24) வாகா எல்லையில் இந்திய அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்தியாவும் பாகிஸ்தானும் கடல் எல்லையை மீறி மீன்பிடிக்கும் மீனவர்களை அடிக்கடி கைது செய்கின்றன. சர்வதேச கடல் பரப்பு நீர் எல்லைகள் சரியாக வகுக்கப்படாததாலும், சரியான இடம் இல்லாததாலும், மீனவர்களின் படகுகள் அடிக்கடி தற்செயலாக ஒன்றுக்கொன்று சர்வதேச எல்லைக்கோடு பகுதியை கடந்து மீன் பிடிகின்றன.
பாகிஸ்தானியர்களால் விடுவிக்கப்பட்ட 20 மீனவர்களில் 15 பேர் குஜராத்தின் சோம்நாத் மாவட்டத்தையும், ஐவர் உத்தரப் பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க : 'இந்திய மீனவர்கள் எல்லை தாண்டாமல் இருக்க வேண்டும்' - இலங்கை எம்பி செந்தில் தொண்டைமான்