திருவனந்தபுரம்: கோடக்கர கறுப்பு பணம் வழக்கில் இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 96 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கோடக்கர கறுப்பு பணம் வழக்கு
கேரளத்தில் முதலமைச்சர் பினராய் விஜயன் தலைமையில் சட்டப்பேரவை திங்கள்கிழமை கூடியது. அப்போது, காங்கிரஸ் எம்எல்ஏ ஷஃபி பரம்பில் கோடக்கர கறுப்பு பண விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
இதையடுத்து, வழக்கின் விவரங்களை அளித்த விஜயன், “ஷம்ஜீர் அளித்த புகாரின் அடிப்படையில் பிரிவு 395 இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், திருச்சூர் கோடகர நெடுஞ்சாலையில் (பைபாஸ்) ரூ.25 லட்சமும் அவரது காரும் ஒரு கும்பல் ஒன்றினால் திருடப்பட்டதாகவும் கூறினார். மேலும் இந்த வழக்கில் தற்போது கூடுதலாக இபிகோ 412, 212 மற்றும் 120 (பி) உள்ளிட்ட சட்டப்பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன” என்றார்.
ரூ.3.5 கோடி
மேலும் வழக்கில் இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜக தலைவர்கள் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளன என்றார். தொடர்ந்து, “தங்கம் வாங்க ரூ.1.12 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் மொபைல் போன் மற்றும் வாட்ச் (கைக் கடிகாரம்) உள்ளிட்ட பொருள்களும் காவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார்.
கோடக்கர கறுப்பு பணம் சட்டப்பேரவை தேர்தலில் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. திருச்சூரில் பாஜக சார்பில் நடிகர் சுரேஷ் கோபி களம் கண்டார். தற்போது அவர் மீதும் குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.
சிறப்பு விசாரணை குழு
அவரிடமும் விசாரணை நடத்தப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கோடக்கர கறுப்பு பணம் வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் விசாரணை அலுவலராக பாலக்காடு துணை காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தேர்தலில் கறுப்பு பணம்- நடிகர் சுரேஷ் கோபிக்கு சிக்கல்!