சோபியான் (ஜம்மு காஷ்மீர் ): ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நேற்று (ஜன.22) சனிக்கிழமை பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் எனவும் ஒருவர் சோபியானைச் சேர்ந்த சமீர் அகமது ஷா மற்றொருவர் புல்வாமாவைச் சேர்ந்த ரயீஸ் அகமது மிர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது குறித்து காஷ்மீர் காவல்துறை ட்விட்டரில், "ஷோபியானில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் உள்ளூர் பயங்கரவாதிகள். ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டன. அங்கு தேடுதல் வேட்டை தொடர்கிறது" எனப் பதிவிட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்ளிட்ட பொருள்களை காவல்துறையினர் கைப்பற்றி, இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: தேசிய பேரிடர் மீட்புப் படையின் ட்விட்டர் பக்கம் 'ஹேக்'!