ETV Bharat / bharat

யாஸ் புயல்: மரம் சாய்ந்து விழுந்ததில் இருவர் உயிரிழப்பு - yaas cyclone

ஒடிசாவின் கெண்டுஜா, பாலசோர் ஆகிய மாவட்டங்களில் யாஸ் புயல் காரணமாக, மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் முறையே இருவர் மரத்தின் அடியில் சிக்கி உயிரிழந்தனர்.

tree
tree
author img

By

Published : May 26, 2021, 12:42 PM IST

யாஸ் புயல் கரையை கடந்து வருவதால், ஒடிசாவில் கனமழை பெய்து வருகிறது. புயல் சேதத்தை கட்டுப்படுத்த ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அந்தந்த அரசால் செய்யப்பட்டிருக்கின்றன. இப்புயலால் ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பலத்த காற்றுடன், கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், புயலால் வீசிய சூறைக்காற்றில், கெண்டுஜார் மாவட்டத்தில் உள்ள பஞ்ச்புல்லா கிராமத்தில், கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பி கொண்டிருந்த நபரின் தலையில் மரத்தின் கிளை விழுந்ததில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரை மீட்டு அங்கிருந்தவர்கள், அனந்தபூர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதைப் போலவே, புயலால் வீசிய சூறைக்காற்றில், பாலசோர் மாவட்டம் ரயில்வே காலனியில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.