ETV Bharat / bharat

அமெரிக்காவில் சீக்கிய குருத்வாராவில் துப்பாக்கிச் சூடு! என்ன நடந்தது? - சீக்கிய கோயிலில் துப்பாக்கிச் சூடு

கலிபோர்னியாவில் சீக்கிய கோவிலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 27, 2023, 9:43 AM IST

Updated : Mar 27, 2023, 9:57 AM IST

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சீக்கிய மத கோவிலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சக்ரமன்டோ நகரில் உள்ள சீக்கிய குருத்வாரால் இரு ஆண்கள் தங்களுக்குள் சுட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் தங்களுக்குள் நன்கு அறிமுகமானவர்கள் என்றும், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

சக்ரமன்டோ நகர காவல் துறையின் செய்தி தொடர்பாளர் அமர் காந்தி கூறுகையில், இருவர் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்ட நிலையில், திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவித்து உள்ளார். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட இந்தியர் தலைமறைவானதாகவும் அவரை போலீசார் தேடி வருவதாகவும் செய்தி தொடர்பாளர் அமர் காந்தி தெரிவித்தார்.

துப்பக்கிச் சூடு நடந்த இடத்தில் முன்னதாக சாக்ரமன்டோ சீக்கிய சங்கத்தின் தரப்பில் நாகர் கீர்த்தனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர்கள் இந்த யாத்திரையில் கலந்து கொண்டனர். அம்ரித் பால் சிங் மீதான கைது நடவடிக்கைக்கு காலிஸ்தான் அமைப்பினர் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்ட நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் சீக்கிய குருத்வாராவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், தலைமறைவான நபரை போலீசார் தேடி வருகின்றனர். என்ன காரணத்திற்காக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்ற சந்தேகமும் மேலோங்கி காணப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சுடு சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

Last Updated : Mar 27, 2023, 9:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.